திங்கள், 26 செப்டம்பர், 2011

புறக்கணிப்பின் எச்சங்கள்!

யுகங்களாய்
கடலெனத் தேக்கி வைத்த எனதன்பை
விழியோரம் தெறிக்கும்
இருதுளி நீராக்கி
புறக்கணித்துச் செல்கிறாய்
வெகு யதார்த்தமாக!


மௌனமாய் விழுந்து
சில்லுகளாய் சிதறுகிறேன்...


பின்னொரு
தேவப்போழுதொன்றில்
பிரியத்தின் பசுமை பூசி
சிதறிய என்னை மெல்ல
சீர்படுத்த முயல்கிறாய்


அதில் நீ வெற்றியும்கண்டு
வெளிப்படுத்தியப் புன்னகையில்
நீக்க முடியாமல்
நிரந்தரமாய் எஞ்சி விடுகின்றன
உடைந்த என் தழும்புகளும்
உனதந்த கடுஞ்சொற்களும்!













கவிதைக்குப் பின் கட்டுரைத் தொடரும்....