புதன், 24 மார்ச், 2010

திருமங்கலம் தொடருமா...?-பகுதி-2

தமிழகத்தில் மற்றுமொரு இடைத்தேர்தல் பென்னாகரம் தொகுதியில் நடைபெறவிருக்கிறது.தேர்தல் பிரச்சாரம் 25- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா "அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக்கவர கூடுதலாக பணம் செலவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறியதுடன் "கூடுதலான பணப்புழக்கம் தெரிய வந்தால் வேட்பாளர் தகுதியிழப்பு செய்யப்படுவார்" என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்(எத்தனை முறை எச்சரிப்பீங்க...)தமிழகத்தில் இடைத்தேர்தல்களும் வரிசையாக வந்தபடிதான் உள்ளன;பணப்புழக்கமும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது.திருமங்கலம் தொடங்கி கம்பம்,இளையான்குடி,தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம்,பர்கூர் இன்று பென்னாகரம் என்று தொடர்கிறது.வரும் இடைத்தேர்தல்களிலும் (மயிலாப்பூர் மக்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்)இதையே எதிர்பார்க்கலாம்.எந்தக் கட்சி பணவிநியோகத்தில் முந்தியதோ அந்தக் கட்சியே அத்தொகுதிகளில் வெற்றியும் பெற்றது.பென்னாகரத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளதாம்.ஆம்!இம்முறை பா.ம.க அதிகளவில் பணம் கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளதாம்(உண்மையா!).இந்த தேர்தலிலும் வெற்றியடைய வேண்டுமென தி.மு.க துடிப்பது ஒருபுறமிருக்க,இந்தத் தொகுதியிலாவது வென்று "இறுதியில் ஜனநாயகமே வென்றது" என்று கொக்கரிக்க முடியாதா என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க ,தங்கள் சமூகத்தினரின் தொகுதியில் தோற்றுவிடக் கூடாது என்ற படபடப்பில் பா.ம.க ,இருக்கும் இந்தத் தொகுதி கிடைத்தாலாவது கூட்டணி பேரம் படியுமே என்ற ஏக்கத்தில் தி.மு.தி.க !



ஆனால் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றால் என்ன இம்முறை நம் தொகுதி திருமங்கலமகிவிட்டது எனும் விட்டேற்றியான மகிழ்வுடன் மக்கள்!ஆனால் இந்த பாணியை தொடங்கி வைத்த கட்சி மீது இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை!குப்தாவும் என்னதான் செய்வார்?தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்ட பாதுகாப்பு வேண்டுமென்றால் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மனம் வைத்தால் தானே நடக்கும்;எனவே ப.சி .அஞ்சாநெஞ்சர் போன்றோரின் வெற்றியையும் கண்டும் கானாமல்தனே இருக்க வேண்டும்!







எது எப்படியோ இந்த முறையும் தி.மு.க-தான் வெற்றி பெறும்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக