செவ்வாய், 21 ஏப்ரல், 2009

வழக்கம் போல்....தேர்தல்...!

பிரச்சாரம் முடிந்ததும்
'நல்ல கலருப்பா' ,
'என்ன குரல்'
எனும் கொள்கைப் பேசிக்
கலையும் கூட்டம்!

யாராவதொரு
'அடுத்த பிரதமர்'
'நன்றி வணக்கம்' எனத்
தமிழில் பேச
ஒருவரிப் புரிந்ததில்
புல்லரித்துப் போகும் தொண்டர்கள்!

ஏதோப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடியப் பட்டியல்
போகுமிடமெல்லாம் பறையடிக்கப்படும்
தான் மட்டுமே தலைவனென்று
நினைவுப்படுத்தப்படும்!
அல்லது
அறிக்கைவிட்டு அனுதாபம் தேடும்!

சுவற்றில்
இடம்பிடிக்கப் போட்டி!
மக்கள் மனதில் அல்ல!

தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்குமே அகப்படவில்லை!!

1 கருத்து:

  1. எப்படி அகப்படும். எல்லா பொத்தானும் சொத்தைப் பொத்தானே! வழக்கம் போல் தேர்தல் வருகையில், வழக்கம் போல் நாமும் பாடும் விரக்தி பாடல் தான் இது.

    அது கிடக்கட்டும், தென்சென்னை சுயேட்சை வேட்பாளரை கவனித்தீர்களா? சரத்பாபு! பேச்சோடு மட்டுமே நாம் நிற்க, செயலிலே இறங்கிய சரத்பாபு வை பாராட்டுவோம்!

    பதிலளிநீக்கு