வழக்கம் போல்
கண்ணாடிப் பார்க்கிறேன்....
வெயிலில் ஒளிர்ந்ததற்கு அடையாளமாய்
முகத்தில் கருமை சுவடுகள்
முல்தானிமெட்டி போட்டு வெள்ளையாக்கிடவேண்டும்
மனதில் தீர்மானித்துக்கொண்டேன்!
அடுத்து.....
தச்சன் இழைத்த
மிச்ச மரச்சுருலென
நெற்றி விழுந்த கேசத்தை
விரலால் கோதி பெருமிதம் கொள்கையில்
அதென்ன.....
வான் மறைக்க விழையும்
பொழியாத மேகத்தில் சிறு
மின்னல் கீற்றென.....நரைமுடி!
இதயத்தில் இடி இறங்கியது!
அனிச்சை செயலாய்
கை அதை களையெடுக்க
பின்புதான் நினைவு வந்தது....
ஒன்றைஎடுக்க நிறைய வரும்
அமுதசுரபி நரைமுடியென யாரோ சொன்னது....!
நாட்கள் அதிகமாக
நரைமுடியும் இரண்டாய்...நான்காய்....!
காதோரத்தில்
நான்கு வெள்ளிமுடிகள்
பிறர் கவனத்தைக் கவர்கிறது
என்ற இறுமாப்பில் சில நாட்கள்...!
நான்கு வெள்ளிமுடிகளாலேயே
பிறரிடம் மரியாதை
அளவுக்கதிகமகிறதோ.....?
என்ற கவலை வர.....
வெள்ளிமுடியை
கார்மேகமாய் மாற்ற
ஏதோ ஒருசாயம் பூச.....
பூச வேண்டிய முடியின்
எண்ணிக்கை வளர்பிறையாய்....!
இப்போதெல்லாம்
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!!
Super articilation of experience. We are all in the same boat!
பதிலளிநீக்குஇளமை எனும் இரசிக்க வைக்கும் இன்பக்காட்சிகளை மறைக்க விழும் முதல் திரை நரை! - என்று எப்போதும் நான் எண்ணுவதுண்டு. இப்போதெல்லாம் இளமைக்கு வரும் முன்பே பலருக்கும் விழுந்திடுது நரை! ஆகவே, நரை ஒரு திரை அன்று.
பதிலளிநீக்கு"தச்சன் இழைத்த மிச்ச மரச்சுருள்" -- நெற்றி விழுந்த கேசத்திற்கான உவமை மிக மிக அருமை. வண்டு இரசிக்கின்றது. அனிச்சை செயலாய் ஒன்றை களையெடுக்க... அப்போது தான் புரிகிறது ஒன்றெடுக்க ஒவ்வொன்றாய் ஓங்கிவரும் அமுதசுரபி இந்நரை முடி" -- யாதார்தம்! நரை கண்டதும் மனம் தோற்றுவிக்கும் பதற்றம் இங்கே புரிகிறது.
கருப்பு தான் புடிச்ச கலரு -- என கவிதையை முடித்த விதத்தில் வண்டுக்கு ஏதோ இடறுவது போல் ஓர் உணர்வு. நரை ஒரு மாபெரும் பிரச்சினை இல்லை என்பது போல் குறிப்பிட்டு முடித்திருந்தால் "நச்" - சென்று இருந்திருக்காதோ என்றொரு ஏக்கம்! நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
வாசிப்பிற்கு நன்றி கேதாரி!
பதிலளிநீக்கு/கருப்புதான் புடிச்ச கலரு என கவிதையை முடித்த விதத்தில் வண்டுக்கு எதோ இடறுவது போல் ஓர் உணர்வு!/
பதிலளிநீக்குஉண்மையில் கவிதையின் முடிவு .....
இப்போதெல்லாம்
இயற்பியலில்
வண்ணக்கலவையின் உச்சம்!
வரலாற்றில்
ஆதிக்க நிறம்!
என்ற நினைப்பில் வர்ணம் பூசுவதில்லை!
இப்படி முடித்திருக்க நினைத்தேன்....!
வண்டின் கருத்து எதுவோ?
வண்டிற்கு மிக்க நன்றி!
வண்டும் நரைக்கு இரை! ஆகையால், கவிதையில் நரை குறித்து நிறை கூறியிருப்பின், அது குறித்து குறைபடும் என் போன்ற மனங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தேடி தந்திருக்குமே எனும் அர்த்தத்தில் வீசிய விமர்சனமே அது! மற்றபடி, நரை முடி பற்றிய கவிதையில் "வரலாற்றில் ஆதிக்க நிறம்" என்பது போன்ற கனமான கருத்துக்கள் சரிவர பொருந்துமா என்பதில் வண்டுக்கு சந்தேகம் உண்டு. அச்சந்தேகம் தாங்களுக்கும் இருக்கவேதான் மாற்றி எழுதியுள்ளீர்கள் அல்லவா?
பதிலளிநீக்குவண்டிற்கு மற்றுமொரு சந்தேகம். வர்ணமும், கலவையும் இயற்பியல் சம்மந்தப்பட்டதா இல்லை வேதியியல் சம்மந்தப்பட்டதா? வேதியியல் என்றே வண்டிற்கு தோன்றுகிறது. இல்லை, மற்றேதும் பொருள் இதில் ஒளிந்திருக்க அது வண்டிற்கு விளங்காது போயிற்றோ?
ஏதாயினும் சரியே!
விரைவில் அடுத்த படைப்பினை எதிர்நோக்கியவண்ணம்...,
சில்வண்டு!
இயற்பியல் படி.. சூரியனின் வெண்ணிற ஒளி மழைத் துளிக்குள் பயணப்படுகையில் மற்ற வண்ணங்களாகப் பிரிகிறது.. prism வழி வெள்ளொளி செல்கையிலும் இது தானே நடக்கிறது...
பதிலளிநீக்குஎந்த ஒரு பொருள் எதிர்கொள்ளும் அனைத்து நிறக் கதிர்களையும் எதிர் ஒளிக்கிறதோ (reflect) அது வெண்மையாகவும், எந்த பொருள் அனைத்து கதிர்களையும் absorb செய்து விட்டு எதையும் reflect பண்ணாதிருக்கிறதோ அது கருமையாகவும் தோன்றுகிறது..
எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்.. தவறெனில் மன்னிக்கவும்....
பார்த்தீர்களா வண்டு தவறாகத்தான் புரிந்திருக்கிறது. வண்டு நினைத்த வர்ணம் நரைக்கு பூசும் சாயம்! அதுதான் வேதியியல் சம்மந்தப்பட்டது. இப்போது புரிகிறது. விளக்கத்திற்கு நன்றி.
பதிலளிநீக்கு