திங்கள், 6 ஏப்ரல், 2009

தன்னம்பிக்கை

வண்ணங்களை
சலவை செய்ய
சம்மதிப்பதில்லை
வானவில் மழையிடம்!

முட்களில்
அமர்ந்திருக்கும்போது
சிரித்த ரோஜா
பறித்ததும் வாடியது

இரைகளுக்காக
இறக்கைகளைப்
பறிகொடுப்பதில்லை
எப்போதும் பறவைகள்!

வீழந்ததற்காகத்
தேங்கிவிடுவதில்லை
ஒருபோதும்
அருவி!

நடப்பதற்கும்
கடப்பதற்கும்
பாதைகள் எதற்குப் புதிதாய்
பாதங்கள் போதும்!










2 கருத்துகள்:

  1. 'வீழ்ந்ததற்காக தேங்கி விடுவதில்லை ஒருபோதும் அருவி" - மிக அருமையான வரிகள். தன்னம்பிக்கையை நிச்சயமாய் கூட்டிடச்செய்யும் வரிகள். வண்டு இதை இரசித்தது. ரோஜா, முள்ளின் மேலா அமர்ந்திருக்கிறது? முள்ளோடு அமர்ந்திருக்கிறது என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ?

    பயணம் செய்ய பாதை எதற்கு பாதம் போதும் என்பதும் அருமை. பாதம் பயணம் செய்தபிறகே அங்கே பாதை உண்டாகும். புதியதோர் பாதை வகுக்க, புதிய சிந்தனை வளர்க்க, புதிய வழிமுறைகள் உருவாக்க, என எந்த புதிய முயற்சிக்கும் தன்னம்பிக்கை அவசியம். இதை வலியுறுத்துகிறது இக்கவிதை. அருமை!

    மனமார்ந்த வாழ்த்தொன்று மனதின் அடி ஆழத்திலிருந்து சமர்பிக்கிறது வண்டு. பின்னணி வர்ணமும், புகைப்படமும் அருமை. சரி, blog-ன் பெயர் எங்கே? எங்கும் தென்படவில்லையே? "வைகறைத்தென்றல்" எனும் பெயர் அருமை. "பாமரன்" என்பது புனைப்பெயரா?

    வளரட்டும் உங்கள் கலைப்பணி!

    பதிலளிநீக்கு
  2. வண்டின் பின்னூட்டங்கள் நிறைய தன்னம்பிக்கை தருகிறது!

    ரோஜா செடியே முட்செடிதானே என்ற எண்ணத்தில் விளைந்தது அவ்வரிகள் !எனினும் திருத்தம் மிக்கப் பொருத்தம்!

    நன்றி!

    பதிலளிநீக்கு